Alphi Global
நம்மைத் தொடர்ந்து இந்த பூமியில் வாழப்போகும் நமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு சிறப்பான, அழகான, மேன்மையான உலகை/ சமுதாயத்தை விட்டுச் செல்வது நமது பொறுப்பாகும். இது போன்ற ஒத்த கருத்தை உடைய கல்வியாளர்கள் நாங்கள் ஒன்றிணைந்து கல்வியை கருவியாகக் கொண்டு சமுதாயத்தில் பல மாற்றங்களையும் குறிப்பிடத்தக்க சில விஷயங்களையும் சாதிக்க இப்பணியைத் தொடங்கியுள்ளோம். இது நிச்சயமாக சாத்தியம். நம்மை தொடர்ந்து வரும் நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய சிறந்த பரிசு – சூழும் உலக விஷயங்களைப் பற்றிய தெளிவான அறிவு கொண்ட ஒர் சமுதாயம், சுய ஒழுக்கம் சிறந்த ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கொண்ட ஒர் சமுதாயம், மத பேதமற்ற ஒர் சமுதாயம், சிறந்த ஆளுமை மற்றும் நிர்வாக திறன் கொண்ட ஒர் சமுதாயம், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒர் சமுதாயம், பெண்ணை அதிகார மையமாக போற்றும் ஒர் சமுதாயம், இயற்கையை நேசித்து காப்பாற்றி பாதுகாக்கும் ஒர் சமுதாயம், மேலும் மனிதநேயத்தை முதன்மையாகக் கொண்டு மனித நேயத்தை மதித்து, பேணிக்காக்கும் ஒரு சமுதாயமே ஆகும். இது நிச்சயம் நிகழும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
About us
இன்றைய கல்விச் சூழலில், பள்ளிகள் முதலீட்டைத் திரும்பப் ஈட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நாங்கள் சார்ந்து வேலை செய்யும் கல்வி நிறுவனங்களில் எங்களுடைய முதற்கண் கவனம் அதுவே. கல்விச்சேவை செயல்பாட்டில் பெற்றோர்கள் , பங்குதாரர்கள் ஆவர். பங்குதாரர்கள் அனைவரின் மனநிறைவே எங்கள் முக்கிய குறிக்கோள். எங்கள் செயல்பாட்டு முறைகளின் மூலம் இதை நாங்கள் செயல்படுத்துகின்றோம். ஒவ்வொரு ஆண்டும் புதிய மாணவர் சேர்க்கை மூலமே ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது எனவே நாங்கள் மாணவர் சேர்க்கையில் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவோம். இதற்கு நாங்கள் பல யுத்திகளை பயன்படுத்துகின்றோம். கல்வித்துறை என்பது எல்லையற்று வானளாவியது. இதில் கவனிக்கப்படாத, முயற்சித்துப் பார்க்கப்படாத அற்புதமான விஷயங்கள் ஏராளமாக உள்ளடங்கும். இவை செயல் வடிவம் கொடுக்கப்பட்டால் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவுவது சர்வ நிச்சயம் . மாணவர்களின் முன்னேற்றம், சமுதாயத்தில் கல்வி நிறுவனத்தின் வெற்றியாகும். கல்வி செயல்பாடானது மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கி செயல்பட்டால் மட்டுமே அது முழு வெற்றி அடையும். ஆனால் இன்று பல கல்வி நிறுவனங்களின் செயல்பாடானது கட்டமைப்பு, அதிக மதிப்பெண்
கண்கவர் செயல்பாடுகள் போன்றவற்றோடு முடிவடைந்து விடுகின்றது. துரதிருஷ்டவசமாக இந்த செயல்பாடுகள் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுவதில்லை. மாறாக வெறும் விளம்பரங்களில் முடிவடைந்து விடுகின்றன. இதன் காரணமாக இந்தக் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட சிறு இடம் / பகுதியோடு முடிவடைந்து விடுகின்றது. அதைத் தாண்டி மற்ற இடங்களில் அவர்களை பற்றி தெரிய வருவதில்லை. மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மனதிற்கொண்டு வடிவமைக்கப்படும் எந்த ஒரு செயல்பாடும் வெற்றியைப் பெறும். மேலும் கல்வி நிறுவனத்தின் புகழ் அனைத்து இடங்களிலும் எந்த தடையும் இன்றி பரவும். எனவே இதை மனதில் கொண்டு நாங்கள் சார்ந்து வேலை செய்யும் கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கி எங்கள் செயல்பாடுகள் அமையும். கல்வி செயல்பாட்டை ஒரு கருவியாகக் கொண்டு இதை நாங்கள் நிகழ்த்த பெறுவோம். நாங்கள் சார்ந்த கல்வி நிறுவனமும் வெற்றி பெறும், மேலும் அதன் புகழ் அனைத்து இடங்களிலும் எந்த தடையுமின்றி பரவும். நாங்கள் எந்தக் கல்வி முறையை சார்ந்து கல்விப் பணியை செய்தாலும், அதை எங்கள் தனிப்பட்ட வழிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் மூலம் மிகச் சிறப்பானதாக சர்வதேச தரத்திற்கு இணையாக செயல்படுத்துவோம். மேன்மேல் பயிற்சிகளின் மூலமாக ஒரு படி மேலானதாக சிறக்க செய்வோம்.
Our solutions
- அரசு நிறுவன செயல்பாடுகள்
- பல்வேறு சிறப்புகளுடன் கூடிய இணைய பாடத் திட்ட செயல்பாடுகள்
- கணினி மற்றும் இணையம் மூலம் கல்வி.
- PRISM – மாணவர்களின் கற்பனை திறன் மற்றும் புதிய சிந்தனைகளைத் தூண்டும் செயல்பாடு
- மாணவர்களின் கற்பனைத் திறன் மற்றும் புதிய சிந்தனைகளை செயல்படுத்த ஆய்வகம்
- கணினி வழி நூலகம்
- மொழி தீர்வு
- ஆங்கில மொழி வளாகம்
- சர்வதேச தரத்துடன் நிகழ்நிலை கல்வி
- மாணவர்களின் முழுமையான வளர்ச்சி தீர்வு
- பாடத் திட்டம் சாராத நடவடிக்கைகள், விளையாட்டு, மற்றும் தடகளம் ஆகியவற்றில் மேன்மை
- ஆசிரியர் தேர்வு மற்றும் பயிற்சி
- பள்ளி – பெற்றோர் உறவு மற்றும் குறைதீர்ப்பு
- மாணவர்களின் ஒழுக்கம், சமூக உறவு மற்றும் சமுதாய பொறுப்பு
Why Alphi Global
இன்றைய கல்விச் சூழலில் பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கும் ஆங்கில மொழி வளாகம் மற்றும் LSRW திறன் மூலம் மொழிப்புலமை, இதை மட்டும் பறைசாற்றாமல், நாங்கள் சார்ந்த பள்ளிகளில் கருத்து அடிப்படை கல்வி மேம்பாட்டை முன்னெடுத்து செல்வோம். கடைபிடிப்போம். இன்று நிலவும் இக்கட்டான வாழ்க்கை சூழலில் நமது மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பாடத்திட்டம் பற்றிய ஓர் ஆழமான தெளிவான புரிதல் வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை ஆழமாக சிந்திக்கவும், சவால்களையும் பொறுப்புகளையும் ஏற்று வகுப்பறைகளை கடந்து உலகோடு இணைந்து இயங்கவும் வழிவகுக்கும். கருத்தடிப்படை கல்வி மாணவர்களை உலகில் மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும்,
ஒரு சிறந்த எதிர்கால உலகையும் சமுதாயத்தையும் உருவாக்குபவர்களாகவும் வடிவமைக்கும். நாங்கள் சார்ந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு கருத்தடிப்படை கல்வியை பற்றிய தெளிவும் கருத்தடிப்படை கற்பித்தலை எடுத்துச் செல்லும் வழிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றிய ஆழ்ந்த சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும். இது ஆசிரியர்களுடன் நிற்காமல் மாணவர்களுக்கும் கருத்தடிப்படை கற்றல் வழிமுறைகளையும் நுணுக்கங்களும் சிறப்பாக பயிற்றுவிக்கப்படும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் அவர்களுடைய திறன் அறியும் விதமாகவும், திறன் வெளிப்படுத்தும் விதமாகவும், அறிவு சார்ந்தும், சமூக பொறுப்புணர்ச்சி தூண்டும் விதமாகவும், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் மற்றும் விளிப்புணர்ச்சியை தூண்டும் விதமாகவும், பாடத்திட்டத்தின் உட்கரு உனர்த்தும் விதமாகவும் அமையப் பெறும். மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் விதமாக இணை பாடத்திட்டம் எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.